×

பேரீச்சம் பழ பரோட்டா

தேவையானவை:

கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் – ½ கப் (விழுதாக அரைத்தது),
வெல்லம் ½ கப்,
மைதா – 2 கப்,
உப்பு,
எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு கொதிக்க விடவும். பாகு கெட்டியாக வரும் போது பேரீச்சம் விழுதைப் போட்டு கிளறி விட்டு, அல்வா பதத்தில் இறுகும் போது இறக்கவும். மைதாவில் உப்புப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவில் சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். உருட்டியவைகளை மெல்லிய அப்பளங்களாக வட்டமாகத் தட்டவும். ஒரு அப்பளத்தின் மீது பேரீச்சைக் கலவையை பரவலாகப் போட்டு அதன் மீது மற்றொரு அப்பளத்தை போட்டு ஓரங்களை ஒட்டவும். தோசைக் கல்லில் எண்ணெயை வட்டமாக பரவலாகத் தடவி பேரீச்சம் கலவை உள்ள அப்பளத்தைப் போட்டு சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும். இதுவே ‘பேரீச்சம் பழ பரோட்டா’. இது சாப்பிட இனிப்பாய், சுவையாய் இருக்கும்.

The post பேரீச்சம் பழ பரோட்டா appeared first on Dinakaran.

Tags :
× RELATED சைனீஸ் காளான் சூப்